‘ஆரண்ய காண்டம்’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற தனித்துவமான படங்களை இயக்கியவர் தியாகராஜன் குமார ராஜா. ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இதுவரை அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.

தியாகராஜன் குமார ராஜா தன் ஒவ்வொரு படத்துக்கும் இடையே மிக நீண்ட இடைவெளி எடுத்து இயக்குவது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளவர் மணிகண்டனே என்றும் கூறப்படுகிறது. மேலும், ஒரு முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.