Touring Talkies
100% Cinema

Thursday, June 26, 2025

Touring Talkies

‘முருகர்’-ஐ மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தில் நடிக்கிறாரா நடிகர் ஜூனியர் என்டிஆர்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகினல் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்டிஆர். ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ஹிந்தி மொழியில் தயாராகும் ‘வார் 2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதோடு ‘கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் பான் இந்தியா படத்திலும் அவர் நடித்துவருகிறார்.

பிரபல தெலுங்கு இயக்குநரான த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அந்த படம் தமிழ் கடவுள் முருகரை மையமாகக் கொண்டு உருவாகலாம் என்றும் கூறப்பட்டது . இதனிடையே, ‘வார் 2’ படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்ற ஜூனியர் என்டிஆரின் கையில் ‘Muruga – The Lord of War, The God of Wisdom’ என்ற ஆனந்த் பாலசுப்ரமணியம் எழுதிய ஆங்கில நூல் வைத்திருந்தார்.

தமிழ் மக்களால் பெரிதும் வழிபடப்படும் முருகர், தெலுங்கு மக்களிடையே கார்த்திகேய, சுப்பிரமணிய சாமி, குமாரசாமி போன்ற பெயர்களில் அறியப்படுகிறார். இந்நிலையில், சரித்திர பின்னணியுடன் கூடிய திரைப்படங்கள் பான் இந்தியா ரீதியில் உருவாகி வருகின்ற சூழலில், த்ரிவிக்ரம் இயக்க, ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ள இந்த படம் முருகரை மையமாகக் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News