தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண். ‘பார்க்கிங்’ மற்றும் ‘லப்பர் பந்து’ போன்ற இரு வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்த இவர், இந்த தீபாவளிக்கு வெளியான ‘டீசல்’ திரைப்படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை.

முதன்முறையாக ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் நடித்த ‘நூறு கோடி வானவில்’ என்ற படம் இன்னும் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இதற்கிடையில், ஹரிஷ் கல்யாணுக்கு இரண்டு புதிய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று பாண்டிராஜ் இயக்கும் படம், இதில் ஹரிஷுடன் இன்னொரு இளம் நடிகரும் இணைந்து நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு படம் ‘றெக்க’, ‘சீறு’ போன்ற படங்களை இயக்கிய ரத்ன சிவா இயக்கும் ஆக்ஷன் திரைப்படமாகும். இந்த இரண்டு படங்களுமே கமர்ஷியலுடன் கூடிய ஆக்ஷன் படங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

