நடிகர் அர்ஜூன் 90களிலும் 2000ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலும் முன்னணி கதாநாயகராக பெரும் பிரபலமாக இருந்தவர்.

கடந்த சில ஆண்டுகளில் அர்ஜூன் கதாநாயகனாக சில படங்களில் நடித்திருந்தாலும், மங்காத்தா, விடாமுயற்சி, லியோ, இரும்புத்திரை போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக அர்ஜூனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.