தமிழ் திரைப்பட உலகில் 90களிலும் 2000களின் ‘ஆக்ஷன் கிங்’ என்ற பெயரும் புகழும் பெற்றவர் நடிகர் அர்ஜுன். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகனாக நடிப்பதைத் தவிர்த்து, வில்லன் மற்றும் துணை வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஒரு புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவியாளரான சுபாஷ் என்பவர் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‘விருமாண்டி’ படத்தில் நடித்த அபிராமி நடிக்க உள்ளார் என்றும் இவர்களின் மகளாக, ‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ்பெற்ற பிரீத்தி முகுந்தன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.