2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் வரலாற்று பின்னணியில் உருவான படம் உருமி. பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர அணியுடன், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கான கதையை சங்கர் ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார்.

இப்போது, ஹிட்டான படங்களுக்கு தொடர்ச்சிப் பாகங்கள் எடுக்கும் டிரெண்ட்டில், உருமி 2 உருவாகி வருகிறது. முதல் பாகம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், இதற்கான கதையை எழுதுவதற்கே 12 ஆண்டுகள் பிடித்ததாக சங்கர் ராமகிருஷ்ணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், உருமி மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் என்றும், இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் முடிவடைந்துவிட்டதாகவும் கூறினார்.
ஆனால், இந்த தொடர்ச்சிப் படத்தை யார் இயக்குவார்கள், முதல் பாகத்தில் நடித்த பிரித்விராஜ், பிரபுதேவா மற்றும் கதாநாயகிகள் மீண்டும் இதில் இடம்பெறுகிறார்களா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.