Wednesday, October 9, 2024

பிரபாஸ்-ன் ஸ்பிரிட் படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைகிறாரா? யாரென்று தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் பிரபாஸ், ‘சலார், கல்கி 2898 ஏ.டி. ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி, ஸ்பிரிட், சலார் 2, மற்றும் ராஜா சாப்’, உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஸ்பிரிட்’என்பது பிரபாஸ்-இன் 25-வது படமாகும். இதனை அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்த படத்தில் கொரியன் சூப்பர் ஸ்டார்  மா டோங்-சியோக், மற்றும் பிரபல பாலிவுட் ஜோடி சைப் அலிகான் மற்றும் கரீனா கபூர் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பான மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் மலையாள மெகாஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேலும், இப்படம் 2026-ம் ஆண்டு, 8 மொழிகளில் வெளியாகும் என்று தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News