‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் துரை செந்தில்குமார் அடுத்ததாக தி லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் லெஜெண்ட் சரவணன் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், ஆக்ஷன் நிறைந்த கதையம்சத்துடன் காணப்படுகிறார். படத்தில், பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கின்றார்.

இந்த படத்தின் பின்னர், துரை செந்தில்குமார், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டூவல் ஹீரோ கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதே நேரத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.