முன்னணி மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன். தமிழில் மூணே மூணு வார்த்தை படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரும்புத்திரை, தீவிரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது ‘சேத்துமான்’ பட இயக்குனரின் புதிய படத்தில் தர்ஷன் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மலையாளத்தில் தயராகி உள்ள ‘4.5 கேங்’ என்ற வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளார். கிருஷாந்த் இயக்கி உள்ளார். மேன்கைண்ட் சினிமா தயாரித்துள்ளது. ஜெகதீஷ், இந்திரன்ஸ், விஜயராகவன், ஹக்கிம் ஷா, சஞ்சு சிவராம், சச்சின், சாந்தி பாலச்சந்திரன், நிரஞ்ச் மணியன் பிள்ளை, ஸ்ரீநாத் பாபு, ஷம்பு அலெக்ஸ் மேனன், பிரசாத்பால், விஷ்ணு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 29 முதல் சோனி லைவ்வில் ஒளிபரப்பப்படுகிறது.
