Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தீவிர வொர்க் அவுட்…கேம் சேன்ஜர் படத்தை தொடர்ந்து RC16 படத்திற்காக கடும் பயிற்சியில் ராம் சரண்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண், ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து வரலாறு படைத்தார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பரில் திரைக்கு வர உள்ளது.

கேம் சேஞ்சர் படத்துக்குப் பிறகு, ராம் சரண் தனது 16ஆவது படத்துக்காக, சுமார் 100 கிலோ எடையுடன் ஒரு கதாபாத்திரமாக மாறவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் பிரபல உடற்பயிற்சி நிபுணர் ஷிவோகத்துடன் இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.இந்த புகைப்படம் வைரலானது.

ஆர்சி 16 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, உப்பெனா திரைப்படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கவுள்ளார்.இந்த படத்திற்காக தீவிர வொர்க் அவுட்டில் ஈடுபட்டுள்ளார் ராம் சரண்.

- Advertisement -

Read more

Local News