காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் பலி ஆனார்கள். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் ஆந்திராவை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார்.

அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் உருவாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் முரளி நாயக் வேடத்தில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான கவுதம் கிருஷ்ணா நடிக்கிறார். விஷான் பிலிம் பேக்ட்ரி சார்பில் சுரேஷ் பாபு தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இயக்குநர் விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நடிகர் கவுதம் கிருஷ்ணா கூறுகையில், இது ஒரு சாதாரண படம் அல்ல, நிஜ ஹீரோவின் கதை. இதுவரை தெலுங்கு சினிமாவில் தனிப்பட்ட ராணுவ வீரரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இல்லை. இதுதான் முதல்முறை. முரளி நாயக்கின் கதை உலகம் அறிய வேண்டியது அவசியம். ஆபரேஷன் சிந்தூர் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தப் போரில் உயிர்நீத்த முரளி நாயக்கின் வீரத்தை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியொரு வலுவான கதையில் நான் நடிப்பது என் அதிர்ஷ்டம்” என தெரிவித்துள்ளார்.