Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

INDIAN -2-வை இருமுறை பார்த்து விட்டாவது நம் TEENZ-ஐ கண்டு கொள்ளுங்கள் – இயக்குனர் பார்த்திபன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது இயக்கி உள்ள டீன்ஸ் படத்தை வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார். ஆனால், இந்த நேரத்தில் அவர், டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய சிவப்பிரசாத் என்பவர்மீது கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், டீன்ஸ் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி 10ம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் முடித்து தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்ட சிவப்பிரசாத், 68.54 லட்சம் ரூபாய் கேட்டார். நான் 42 லட்சம் முதல்கட்டமாக செலுத்திவிட்டேன், ஆனபோதிலும் இன்னும் தனது படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர் முடித்துத் தரவில்லை என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இப்படத்தை அனைவரையும் காண அழைத்துள்ளார் பார்த்திபன். அவர் பதிவுசெய்த ட்வீட் இதோ.,

- Advertisement -

Read more

Local News