இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருவதால், அந்த பகுதியிலும் சர்வதேச அளவிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,

“பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப்படலாம். இந்தியா பழிக்குப் பழி அடிக்கும் சூழலில், பாக். பிரதமர் பதுங்கிக் குழியில் ஒதுங்கி ஓரமாக உள்ளார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.போர் நெறியுடன் செயல்படும் நம் இந்தியா என்ற வலிமையை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடுகிறது. இதற்கு பதிலளிக்க, நம் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் – குறிப்பாக S-400 போன்று, வானிலேயே இலக்கை அழிக்கிற அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இதை மொபைல் திரையில் காணும் போது, காறி துப்பியது போல் எதிரிகளை அழிக்கும் அந்த தாக்கம் நம்மை பரவசப்படுத்துகிறது. ஆயினும், இந்த நிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து, பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு முறையான தீர்வை கூறி, பொதுமக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்,” என பதிவிட்டுள்ளார்.