அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்ஸிக்’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஸ்ரீலீலா. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு சினிமாவிலும் பல அதிரடி பாடல்களில் ஆட்டமிடி வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ரீலீலா கூறுகையில், “நான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் மாஸ் லுக் கொண்ட கெட்டப்பில், அதிரடியான பாடல்களுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் எனக்கு மெலோடி பாடல்கள்தான் மிகவும் பிடிக்கும். குறிப்பாக உணர்ச்சிபூர்வமான காதல் பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன்.
அந்த வகையில் நான் ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் பழைய தெலுங்கு படங்களின் இனிமையான பாடல்களையே கேட்பது வழக்கம். அவை எனது நாளை அமைதியாகவும் நேர்மறையாகவும் தொடங்கச் செய்கின்றன. இன்றைய பரபரப்பான சூழ்நிலையிலும் அந்த பழைய பாடல்கள்தான் எனக்கு மனநிம்மதியை அளிக்கின்றன என்று கூறியுள்ளார் ஸ்ரீலீலா.

