Thursday, December 19, 2024

நடிப்பிலும் இசையிலும் இன்னமும் கடினமான உழைக்க போகிறேன்… ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட நன்றி அறிக்கை! #GV100

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘புறநானூறு'(தலைப்பு மாறலாம்) படத்தின் மூலம் 100 வது படத்தை எட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.

ரஜினி, அஜித் , விஜய் , விக்ரம், சூர்யா, தனுஷ், சிலம்பரசன், பிரபாஸ், ரவி தேஜா, சித்தார்த் , கார்த்தி, ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ராம் பொத்தனேனி, அதர்வா, ராகவா லாரன்ஸ், அருண் விஜய், பரத், பசுபதி என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன். இவர்களுடன் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில் அவரது தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2005ம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். ‘சூரரைப் போற்று’ எனும் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெல்வதற்கு காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நூறாவது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறேன்.

தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும், நடிப்பதிலும், பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News