மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்தில் உடல் எடை குறித்து விமர்சனங்களுக்கு தானும் ஆளானதாக வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பேட்டியில், ஒரு முறை விமான நிலையத்தில் எனக்குத் தெரியாத ஒருவர், ‘நீ ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்? என்று முகத்தில் அடித்தார்போல் கேள்வி கேட்டார்.

அவர் எல்லோர் முன்னிலையிலும் அப்படிச் சொன்னபோது, நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். என்னைப் பற்றி இப்படி எப்படிச் சொல்ல முடியும்? என அவரிடம் வாதிட்டேன். பிறகு அவர் மன்னிப்பு கேட்டார்.
மேலும், முன்பு இப்படிப்பட்ட வார்த்தைகளை என்னால் தாங்க முடியாது. ஆனால் இப்போது நான் வலிமையானவள் ஆகிவிட்டேன். எதிர்மறையான கருத்துகளைப் பற்றி கவலைப்படுவதில்லை எனத் தெரிவித்தார். 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம், சூரரைப் போற்று, ராயன் போன்ற படங்களில் நடித்த அவர், தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். தற்போது அவர் நடித்துள்ள மிராஜ் படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.