நடிகை கெட்டிகா ஷர்மா, சமூக ஊடகங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சரியான காரணத்தை வெளிப்படுத்தாமல், சில நாட்களுக்கு சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் விரைவில் மீண்டும் திரும்பிவருவேன் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ரொமான்டிக், ரங்கா ரங்கா வைபவங்கா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான கெட்டிகா ஷர்மா, ராபின்ஹுட் திரைப்படத்தில் “அதிதா சர்ப்ரைஸ்” என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி விமர்சனங்களுக்கு உள்ளானார். கடைசியாக சிங்கிள் படத்தில் நடித்திருந்த அவர், தற்போது தமிழ்த் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.