2003-ல் வெளியான எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தனது நீண்டநாள் காதலரான ஆன்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், தற்போது சிறிய கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் ரெட்ரோ படத்தில் குத்தாட்டம் போட்டும் ரசிகர்களை கவர்ந்தார். அடுத்தடுத்த படங்களிலும் நடனக் காட்சிகளில் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சமீபத்திய பேட்டியில் அவர் , ‘‘ரசிகர்களுக்குப் பிடித்ததை கொடுத்தால், அவர்கள் நம்மை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். இனி தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்கப் போகிறேன்’’ என ஸ்ரேயா தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் அவர் கொண்டுள்ள நம்பிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.