தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது ‘ஹிட் 3’, ‘தி பாரடைஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுவரை நடிகராக மட்டுமே இருந்த அவர், தற்போது தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

அதன்படி, ‘ஹிட் 3’ மற்றும் ‘கோர்ட் – எ ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இதில், ‘கோர்ட் – எ ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவின் போது, நானி பேசிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறியதாவது, நான் இதுவரை உங்களிடம் என் எந்த படத்தையும் பார்க்குமாறு கேட்டதில்லை. ஆனால், முதன்முறையாக, ‘கோர்ட் – எ ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றால், ‘ஹிட் 3’ பார்க்காதீர்கள்” என்று அவர் கூறினார்.நானியின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தில் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.