தனது திரையுலகப் பயணத்தின் ஆரம்பத்தில் ‘புல்புல்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை திரிப்தி டிம்ரியை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படம் தான் அவரை டாப் ஸ்டாராக மாற்றியது.

தற்போது, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் பிரபாஸின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், திரைப்படதுறை பின்னணி இல்லாதவர்கள் திரைப்படத் துறையில் சந்திக்கும் சவால்கள் குறித்து தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், திரைப்பின்னணி இல்லாதவர்கள் என்றால், ஒரே ஒரு வாய்ப்பு கிடைக்கும், மறுநாள் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதன் பிறகு, அடுத்த படத்தை பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இரண்டு படங்களும் வெற்றிபெறவில்லை என்றால், நாம் காணாமல் போய் விட நேரிடும் இது தான் உண்மை. எனவே, கதையும், உங்கள் கதாபாத்திரங்களிலும் முழு நம்பிக்கையுடன் செயல்படவேண்டும்” என்றுள்ளார்.