மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மாடலிங் துறையில் இருந்த இவர், ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். துபாயில் வசித்து வரும் இவருக்கும் ரஜித் இப்ரான் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைப்பெறவுள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளமான எக்ஸில் அவர் பதிவிட்ட கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில், செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும் கொலை, போர், கொடுமை காட்சிகள் தான் தென்படுகிறது. நாம் தேடாவிட்டாலும் தினமும் அதை பாரக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த அளவிலான வன்முறை, நம்முள் இருக்கும் மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழிகளைத் தேட வேண்டும் போல என குறிப்பிட்டுள்ளார்.