90ஸ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட நடிகை லைலா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து விலகிய அவர், கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வருகை தந்தார். அதன்பின், நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஷாம் லைலா குறித்து பேசுகையில், எனக்கு பிடிக்காத நடிகை ஒருவர் இருக்கிறார்கள் என்றால் அது லைலாதான் என்று சொல்வேன் ‘உள்ளம் கேட்குதே’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் தொந்தரவு செய்கிற மாதிரியானது. அந்த படமெல்லாம் அவர் என்னை ‘டார்ச்சர்’ செய்வது போல் நடித்திருப்பார்.
இதனால் ஒரு கட்டத்தில் அவருடன் இனி நடிக்கவே கூடாது என்று நான் தீர்மானித்து விட்டேன். ஆனால் உண்மையில் அவர் மிகவும் ஜாலியான மனிதர். நல்ல மனமுள்ளவர், நல்ல நடிகை என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.