பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘ஆர்யன்’. அக்டோபர் 31-ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் அமீர்கான் ஆர்வமாக இருந்தார் ஆனால் கடைசியில் அவர் நடிக்கவில்லை. இதுகுறித்து விஷ்ணு விஷால் பேசியபோது, நான் பல போலீஸ் கதைகளில் நடித்திருந்தாலும், ‘ஆர்யன்’ அதிலிருந்து மாறுபட்ட கதை. இதில் ராட்சச மாதிரியான காட்சி இல்லை, ஆனால் வில்லன் கேரக்டர் பவர்புல். அந்த வில்லன் கேரக்டரை இயக்குனர் செல்வராகவன் நடித்து உள்ளார்.

இந்த படத்தை ஹிந்தியில் உருவாக்க நினைத்தோம். அமீர்கான் ஆர்வமாக இருந்தார். இரவு 10 மணி முதல் அதிகாலை வரை படம் மற்றும் கதாபாத்திரம் குறித்தும் விவாதித்தோம். ஆனால் சில மாறுதல்கள் அவர் இமேஜ்க்கு பொருந்தவில்லை. அந்த மாற்றங்களை செய்ய முடியுமா என்று கேட்டார். கதையில் அவை முக்கியம் என்பதால் மாற்ற முடியாது என்று நாங்கள் தெரிவித்தோம். கடைசியில் அவரால் நடிக்க முடியாமல் போனது.
நான் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பல படங்களில் நடித்துள்ளேன். தமிழில் நல்ல படங்கள் வந்தால் இயக்குனர் மற்றும் படக்குழுவை பாராட்டுகிறேன், ஆனால் எனக்கு பாராட்டுகள் கிடைப்பது இல்லை. என் படங்கள் ஹிட் ஆகும்போது இயக்குனரை பாராட்டுகிறார்கள், என்னை மறந்து விடுகிறார்கள். ‘ஆர்யன்’ என்பது என் மகன் பெயர். அவனின் பெயரில் இப்படத்தை தயாரிக்கிறேன். பட விழாவுக்கு அவனை போலீஸ் உடையில் அழைத்துவந்தேன் அவன் கை விலங்கு போட்டு மேடையில் பேசினான் என்று சொல்லி மகிழ்ந்த விஷ்ணு விஷால், என் அப்பா ரமேஷ்குடவாலா முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும் குறிப்பிட்டார்.