நஸ்லென், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான “லோகா அத்தியாயம் 1” படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் வில்லனாக நடித்த அனுபவத்தைப் பற்றி நடன இயக்குனர் சாண்டி பகிர்ந்துள்ளார்.

“லோகா பயணம் லியோ படத்திலிருந்து தான் தொடங்கியது. அந்த படத்தில் என் கதாபாத்திரம் இல்லையெனில் இன்று லோகாவில் இடம்பெற முடியாது. லோகா இயக்குனர் டொமினிக், லியோ படத்தில் எனது நடிப்பைக் கண்டு தான் என்னை தேர்வு செய்தார். படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்படியொரு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றார்.
மேலும், “லோகா சாப்டர் 1 கிளைமாக்ஸில் நான் இறந்தது போல் காட்சியிருக்கும். ஆனால், கதையின் படி காட்டேரிகளுக்கு மரணம் கிடையாது. கத்தியால் குத்தி சாகடிக்க முடியும். ஆனால், கத்தியை எடுத்துவிட்டால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள். இதுவே லோகா யூனிவர்ஸ் விதி. எனவே காட்டேரிகள் மீண்டும் வருவார்கள். ஆனால், அது எந்த பாகத்தில் நடக்கும் என்பது தெரியாது” என்றும் தெரிவித்துள்ளார்.