Touring Talkies
100% Cinema

Friday, October 3, 2025

Touring Talkies

எனக்கு பிரச்சினை என்றால் முதலில் வந்து நிற்பவர் துல்கர் தான் – நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் துல்கர் சல்மானின் 42வது பிறந்தநாளையொட்டி இன்று (29/07/2025) முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்த வரிசையில், ‘வரனே அவஷ்யமுண்ட்’ படத்தில் துல்கருடன் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

துல்கரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நான் நீளமான ஒரு வாழ்த்துப் பதிவை எழுதி பகிர்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, நான் நடிக்கும் ‘லோகா’ படத்தின் டீஸரைப் பகிர்ந்தே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார் என்பது சிறப்பானது.

திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருந்து வரும் மனிதர் துல்கர். கடந்த ஐந்து ஆண்டுகளில், எனக்கு எந்தவொரு சிக்கலும் ஏற்பட்டாலும், முதலில் எனக்காக வருபவர் அவர். என்னை வழிநடத்தி, உரிய அறிவுரைகளை வழங்கியதற்காக அவருக்கு எப்போதும் நன்றி கூறுவேன். நான் ஒருபோதும் தனியாக இருக்கவில்லை. அதற்குக் காரணம் தாங்கள்தான். நீங்கள் இல்லையென்றால் நான் இன்று என்னவாக இருந்திருப்பேன் என என்னால் கூற முடியாது. என் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் என்னுடன் இருந்ததற்காக என் உள்ளம் கனிந்த நன்றி என்று நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News