Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ராமாயணா படத்தில் வேறு கதாபாத்திரங்களில் நடிக்க சொல்லியிருந்தால் நடித்திருக்க மாட்டேன்…. நடிகர் யாஷ் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் யாஷ், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘KGF 1’, ‘KGF 2’ ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதை கவர்ந்து, பெரிய அளவில் வசூலைக் குவித்தன. இதற்குப் பிறகு, யாஷ் தனது 19வது படமான ‘டாக்சிக்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பிரபல நடிகை மற்றும் இயக்குனரான கீது மோகன் தாஸ் இயக்கி வருகிறார். ‘கேவிஎன் புரோடக்சன்ஸ்’ தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்திய ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் யாஷ், ‘KGF 3’ மற்றும் ‘ராமாயணம்’ படங்களைப் பற்றிய அப்டேட்டுகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ராமாயணம்’ படத்தில், ‘வேறு எந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பீர்களா?’ என்று கேட்டால், இல்லை எனச் சொல்வேன். ராவணன் கதாபாத்திரம் மிகவும் கவர்ச்சிகரமானது. வேறு எந்த காரணத்திற்காகவும் நான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது என் வாழ்க்கையில் மிகப் பெரிய அனுபவமாக இருக்கும். ஒரு நடிகராக நான் மிகுந்த உற்சாகத்தில் உள்ளேன். ‘KGF 3’ படம் நிச்சயம் வரும், அதற்குப் பணிகள் தொடங்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால், இப்போதைக்கு ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமாயணம்’ படங்களில் மட்டும் எனது கவனம் உள்ளது,” என அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News