பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது “தேவா” என்ற படத்தில் நடித்துள்ளார், இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷாஹித் கபூர், தனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என்று கூறினார். இது குறித்து அவர் தனது கருத்துக்களை பகிர்ந்தபோது, “நான் எப்போதும் சரியான விஷயங்களையே செய்ய விரும்புகிறேன். எனது குழந்தைகள் என்னைவிடவும் இயல்பாக தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் இயல்பாகவே மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பவன் அல்ல.
அதனால், எனது குழந்தைகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. திரைத்துறையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. இது ஒரு கடினமான பாதை. எனது குழந்தைகள் விரும்பினால் அவர்கள் இந்த துறைக்கு வரலாம். ஆனால், இந்த கடினமான வேலைக்குப் பதிலாக வேறு எளிமையான வேலையை தேர்ந்தெடுக்க நான் பரிந்துரைப்பேன்,” என்றார்.