விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்து பிரபலமான ஸ்ரேயா ரெட்டி, சமீபத்தில் பிரபாஸ் நடித்த சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் ஸ்ரேயா ரெட்டி இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் ஓஜி படத்தில் நடித்துள்ளார். நேற்று திரைக்கு வந்த இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்திய ஒரு நேர்காணலின் போது, எதிர்காலத்தில் நடிக்க விரும்பும் வேடங்கள் குறித்து ஸ்ரேயா ரெட்டி பேசினார். 2003-ம் ஆண்டு வெளியான கில் பில் போன்ற படங்களில் நடிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “எனக்கு கில் பில் போன்ற படத்தில் நடிக்க ஆசை உள்ளது. எனக்கு வாள் எடுத்து சண்டை போட மிகவும் பிடிக்கும். தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றுள்ளேன். நான் ஹீரோக்களுக்கு இணையாக பிட்டாக இருக்கிறேன் என்றுள்ளார்.