தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக எல்.ஐ.கே என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

அதனை தொடர்ந்து கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், வா வாத்தியார் படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி ஷெட்டி, தான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை என்றும் அவரது ’பையா’ படத்தை 100 முறைக்கு மேல் பார்த்திருப்பதாகவும் கூறினார். மேலும் தனக்கு படங்களை இயக்குவதில் ஈர்ப்பு உள்ளது என்றும் என் ஒவ்வொரு இயக்குனர்களும் எனக்கு குரு போன்றவர்கள் அவர்களிடம் கற்று வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

