“ஜடாதாரா” திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சுதீர் பாபு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் நவம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ஆடை வடிவமைப்பாளர் விக்ரம் பட்னிஸின் விழாவில் கலந்து கொண்ட சோனாக்ஷி அணிந்திருந்த உடையை வைத்து, சமூக வலைதளங்களில் அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின.
இதற்கு பதிலளித்த அவர், மனித வரலாற்றில் நீண்டகால கர்ப்ப சாதனையை படைத்திருப்பேன் போல…என நகைச்சுவையாக கூறி, வதந்திகளை தகர்த்துள்ளார். இதற்கு முன்பும் இதேபோன்ற வதந்திகள் பலமுறை பரவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சோனாக்ஷி நடிகர் ஜாகீர் இக்பாலை திருமணம் செய்துகொண்டார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.