Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நான் பஞ்ச் டயலாக்குகளை இப்போதைக்கு பேச மாட்டேன்… காரணம் இதுதான் – துல்கர் சல்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் துல்கர் சல்மான், 2022-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, இதில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

துல்கர் தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது, துல்கர் சல்மான் பஞ்ச் டயலாக்குகளை தவிர்ப்பதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

அவர், பெரிய சூப்பர் ஸ்டார்கள் மட்டுமே பஞ்ச் டயலாக்குகளை கூற தகுதியானவர்கள் என்று நான் எண்ணுகிறேன். இளம் நடிகர்கள் அல்லது புது முகங்கள் இதை முயற்சி செய்தால், ரசிகர்கள் அவர்களுக்கு இன்னும் வளர்ச்சி தேவை எனக் கருதுவார்கள். அதனால், ரசிகர்களுக்கு அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். நான் பஞ்ச் டயலாக்குகளை பேச இன்னும் சில காலம் ஆகலாம்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News