Tuesday, January 14, 2025

இதெல்லாம் இல்லாமல் நான் வெளியே செல்ல மாட்டேன்… நடிகை ராஷா ததானி OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை ரவீனா தாண்டன், 90களில் முன்னணி நடிகையாக பிரபலமானவர். சமீபத்தில், ‘கே.ஜி.எப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘சாது’, ‘ஆளவந்தான்’ போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். அவரது மகள் ராஷா ததானி, தற்போது திரைப்படத்துறையில் அறிமுகமாக உள்ளார்.

இவர் அபிஷேக் கபூர் இயக்கும் ‘ஆசாத்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார். இந்த நிலையில், புகைப்படக் கலைஞர்களுடன் நடந்த தனது முதல் சந்திப்பை ராஷா ததானி நினைவுகூர்ந்தார்

அப்போது அவர் கூறியது,”நான் தலைமுடியை வாஷ் செய்ய சலூனுக்குச் சென்றிருந்தேன். எங்கள் காரின் எண்கள் ஒரே மாதிரியானதால், புகைப்படக் கலைஞர்கள் என்னை என் அம்மா (ரவீனா தாண்டன்) என்று தவறாக நினைத்து புகைப்படம் எடுத்துவிட்டனர். இதனால் அவர்களைப் பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன். ஆனால் இப்போது அவர்களைப் பார்த்து எந்த பயமுமில்லை. அதற்கெல்லாம் தயாராக இருக்கிறேன்.அதனால் நான் வெளியில் செல்லும்போது லிப்ஸ்டிக் மற்றும் கண் மை இல்லாமல் செல்ல மாட்டேன். மேக்கப் போடவில்லை என்றால், சன் கிளாஸ் அணிந்து செல்ல முயற்சிப்பேன்”என்று அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News