தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படத்தின் மூலம் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்ற இயக்குநர் சேகர் கம்முலா, சினிமா துறையில் தாம் சந்தித்த கடினமான தருணங்களை குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “என்னுடைய படங்களை யாராவது நிராகரித்தால் நான் ஒருபோதும் அதற்கு கோபப்பட மாட்டேன் அல்லது எவரிடமும் விரக்தியாகவும் உணர மாட்டேன்.

நான் ஒரு நல்ல படத்தை உருவாக்க முடியும் என்று மட்டும் தான் சொல்ல முடியும். ஆனால் அந்த படம் நடிக்க வருகிற நடிகர்களுக்கு புகழைத் தருமா அல்லது அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை தருமா என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு இயக்கிய ‘கோதாவரி’ என்ற திரைப்படத்துக்காக ஒரு முன்னணி தென்னசநடிகரை அணுகியபோது அவர் அந்த கதையை நிராகரித்துவிட்டார் என்றும், பின்னர் தெலுங்குத் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ள ஒரு நடிகரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவரை அணுக முடியவில்லை என்றும் அவர் கூறினார். அந்த கதாபாத்திரத்தில் இறுதியில் நடிகர் சுமந்த் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.