Touring Talkies
100% Cinema

Tuesday, April 29, 2025

Touring Talkies

அழகாக இருக்க வேண்டுமென்று நான் எதையும் செய்ய மாட்டேன் – நடிகை ராகுல் பிரீத் சிங் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மொழியில் “தடையற தாக்க”, “என்னமோ ஏதோ”, “ஸ்பைடர்”, “தீரன் அதிகாரம் ஒன்று”, “இந்தியன் 2”, “அயலான்” ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் இணைந்து ‘தே தே பியார் தே 2’ படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கி 15 ஆண்டுகள் பூர்த்தி செய்ததை ஒட்டி, அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “அழகாக இருக்க வேண்டுமென்று நான் எதையும் செய்ய மாட்டேன்” என்று மனம் திறந்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது, “எப்போதும் அழகாகத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக நான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. எனக்கு அத்தகைய தேவையும் ஏற்படவில்லை. ஏனென்றால், கடவுள் எனக்கு இயற்கையான அழகை வழங்கியுள்ளார். அதேசமயம், யாராவது அழகாகத் தோன்ற வேண்டும் என்று எண்ணி அறுவை சிகிச்சை செய்ய விரும்பினால் அதில் தவறு ஒன்றும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News