நடிகை சமந்தா, சமீபத்தில் தனது சொந்த தயாரிப்பில் உருவான சுபம் திரைப்படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். இதனால், சமந்தா ஏன் புதிய படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்ற விவாதம் எழுந்தது. இதற்கான விளக்கத்தை அவர் நேரடியாக அளித்துள்ளார்.

தனது திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில் முழுமையாக சினிமாவிலேயே கவனம் செலுத்திய சமந்தா, இப்போது சினிமாவோடு சேர்த்து தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார் என்று தெரிவித்துள்ளார். அதனால் தான் சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும், ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
பாலிவுட்டில் சமந்தா கடைசியாக நடித்தது, ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரின் இந்தி பதிப்பான சிட்டாடல் ஹனி பனி. தற்போது அவர், பிரஜ் மற்றும் டிகே தயாரிக்கும் ரக்ட் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.