நடிகை சமந்தா சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து, தயாரிப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது மா இண்டி பங்காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேசமயம் தற்போது அவர் தினமும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஃபிட்னஸாக இருக்க முயற்சி செய்து வருகிறார். . சமீபத்தில் அவர் கடுமையான உடற்பயிற்சி மூலம் ஆண்களுக்கு இணையான ஃபிட்னஸ் உடன் இருக்கும் தனது ஜிம் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் பதிவு செய்தனர். அதில் ஒருவர் இப்படியாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டால் உங்கள் உடல் மீண்டும் மெலிந்து விடும் என்றார். அதற்கு சமந்தா, எப்போதாவது உங்கள் அறிவுரை தேவைப்பட்டால் அந்த நேரத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் தற்போது அது தேவையானதாக இல்லை என்று பதில் அளித்தார். சமந்தாவின் இந்த பளீச் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

