Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நான் இந்த படங்களில் நடிக்கமாட்டேன்… நடிக்க பிடிக்காது… நடிகை நித்யா மேனன் OPEN TALK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் ‘வெப்பம்’, ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’, ‘இருமுகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யா மேனன், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில், “நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் எல்லோராலும் பாராட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லை. நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை அளிக்குமென்றால் அதுவே போதும் என நான் நினைப்பேன். அதை மனதில் வைத்து மட்டுமே கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறேன். பெரிய பட்ஜெட் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், எனக்கு அது பிடிக்காததால் ஒப்புக்கொள்வதில்லை.

நல்ல கதாபாத்திரம் இருந்தால், அது சிறிய பட்ஜெட்டிலானாலும் நடிக்க சம்மதிப்பேன். அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குமோ என ஆர்வமாகக் காத்திருப்பேன். அனைவரும் கடைபிடிக்கும் வழியில் நானும் சென்று ஆக வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை,” என அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News