பவ்யா திரிகா, ‘கதிர்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர், ரியோ ராஜுடன் ஜோடியாக நடித்த ‘ஜோ’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றார். தற்போது வெளியாகியுள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலமாக மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவரது சமீபத்திய பேட்டி ஒன்றில், பன் பட்டர் ஜாம் படத்தில் நான் நடித்த நந்தினி என்ற கதாபாத்திரம், ரசிகர்களையும் விமர்சகர்களையும் பெரிதும் ஈர்த்தது. இன்றைய இளம்பெண்களின் மனநிலையை அந்தக் கதாபாத்திரம் பிரதிபலித்ததே இதற்குக் காரணமாக இருந்தது.
இதற்கு முன்பு பல வாய்ப்புகள் வந்தபோதிலும், அந்த வாய்ப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் சாதாரணமாகவும், உணர்வில்லாதவையாகவும் இருந்ததால் நான் அவற்றை ஏற்கவில்லை. உண்மையான நடிப்பு திறமை வெளிப்படும் ஒரு கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். அதனாலே சில மாதங்கள் இடைவெளி ஏற்பட்டது என்றார்.