டி.வி. தொடர்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் கதாநாயகியாகி இருப்பவர் வாணி போஜன். இவர் ‘ஓ மை கடவுளே’, ‘லாக்கப்’, ‘மலேசியா டூ அம்னீசியா’, ‘மிரள்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘லவ்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மனம் திறந்து பேசிய அவர், “மனதில் இருப்பதை பேசுங்கள் என சொல்கிறார்கள். ஆனால், நான் மனதில் இருப்பதை ‘பட்’டென பேசிவிட்டுப் பல இடங்களில் சிக்கிக்கொள்கிறேன். இந்த பழக்கத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்,” என தெரிவித்தார்.
மேலும், “படங்களில் நடித்த பிறகு ஓ.டி.டி. வெப் தொடர்களில் நடிப்பதில் எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. நான் எதையும் பிரித்துப் பார்க்கும் பழக்கமில்லை. எனது கதாபாத்திரங்களை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். வெப் தொடர்களில் நடித்ததினால், பட வாய்ப்புகள் பறிபோகும் என்ற பயம் எனக்கில்லை. ‘சட்னி சாம்பார்’ வெப் தொடருக்காக எனக்கு கிடைத்த பாராட்டு அளவில்லாதது. எனவே நல்ல கதாபாத்திரங்களை நான் ஒருபோதும் தவறவிட மாட்டேன்,” என்றார்.