“மாமன்னன்” மற்றும் “வாழை” படங்களுக்கு பிறகு, துருவ் விக்ரம் நடிப்பில் “பைசன்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். கபடி விளையாட்டு வீரரை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துவருகிறார். “பைசன்” படத்தின் பின்பு, தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ்.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், அவரது மனைவி அவரிடம் ஒரு கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார். “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தைப் போல ஒரு காதல் கதையில் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை.

இதனால், சமூக பிரச்னைகள் இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதையில் ஒரு படத்தை உருவாக்குவேன் என்று தனது மனைவியிடம் சபதம் செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.