தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகராக விளங்கிய நாகேஷின் மகனாக ஆனந்த்பாபு திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும், சிறந்த நடன கலைஞராகவும் அறியப்பட்டவர். இப்போது அவர் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பல்வேறு வேடங்களில் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஆனந்த்பாபுவின் மகனான கஜேஷ் தற்போது பத்மராஜூ ஜெய்சங்கர் தயாரிக்க, பாஸ்கர் சதாசிவம் இயக்கும் ‘உருட்டு உருட்டு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ரித்விகா ஸ்ரேயா, அஸ்மிதா, ஹேமா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவில் பேசிய ஆனந்த்பாபு, ‘‘என் தந்தைக்கும், எனக்கும் ரசிகர்கள் அளித்த ஆதரவை என் மகனுக்கும் அளிக்க வேண்டும். அவர்களின் அன்பையும் நம்பிக்கையையும் நம்பி என் மகனைத் திரைத்துறையில் அறிமுகப்படுத்துகிறேன்,’’ என்று மனமுவந்தோடு தெரிவித்தார்.
அதன்பின் கஜேஷ் பேசும்போது, ‘‘என் தாத்தா மற்றும் என் அப்பாவின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன். அவர்களைப் போலவே நான் திரையுலகில் ஜொலிப்பேன். இந்த சினிமாவுக்காக என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என உறுதியளிக்கிறேன். அதிகம் பேசாமல் என் செயல்களால் சாதனை படைக்க விரும்புகிறேன்,’ என உறுதியாக பேசினார்.