நடிகை ஜோதிகா, தமிழில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்து கடைசியாக தமிழ்த் திரையுலகில் தோன்றினார். அதன் பிறகு, பாலிவுட் திரையுலகில் ‘சைத்தான், ஸ்ரீகாந்த்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது, ‘டப்பா கார்டெல்’ எனும் வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்த நிலையில், ஜோதிகா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில்,தென்னிந்திய சினிமாவில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தான் பெரும்பாலும் தயாராகின்றன. நடிகைகளை பெரும்பாலும் கிளாமர் தோற்றத்திற்காக, பாடல்களுக்கு நடனமாடுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சில திரைப்படங்களில் ஆண்களை புகழ்ந்து பேசவும் நடிகைகளை மட்டும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், எனக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை. எனவே, எனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்தேன். எதிர்காலத்திலும், பெண்களுக்கு அழுத்தமான கதாபாத்திரங்களாக இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.” என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.