Monday, January 20, 2025

வரலட்சுமியை நடித்த ஒரு காட்சியை கண்டு கண்கலங்கினேன்… நடிகர் விஷால் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்று விஷால் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஜோடி. 12 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மதகஜராஜா என்கிற ஒரே படத்தில் நடித்தார்கள். அந்த படத்தில் நடித்த பிறகே இவர்களது நட்பு நெருக்கமாகி, பல நிகழ்ச்சிகளுக்கு இணைந்து வருவது வழக்கம் ஆனது. இதனால் காதல் கிசுகிசுக்களில் சிக்கினர். இருவரும் இந்த பேச்சுக்களை மறுக்கவில்லை என்பதால், அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவலும் பரவியது.

பின்னர், விஷால் ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடத்தியிருந்தார். ஆனால் அந்த திருமணம் நடைபெறாமல் நிற்க நேர்ந்தது. இதையடுத்து, வரலட்சுமி, விஷாலின் நெருங்கிய நட்பிலிருந்து ஒதுங்கி, சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் நிக்கோலஸ் சக்தேவுடன் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், விஷால் மற்றும் வரலட்சுமி நட்பு உருவாக காரணமாக இருந்த மதகஜராஜா திரைப்படம், 12 வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையில் வெளியாகி வெற்றிப்படமாக மாறியுள்ளது. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில், விஷால் மற்றும் வரலட்சுமி இருவரும் கலந்து கொண்டனர்.

அப்போது வரலட்சுமியை பற்றிப் பேசிய விஷால், “12 வருடங்கள் கழிந்தும், வரலட்சுமி பிரிட்ஜில் வைத்தது போல புதிதாகவே உள்ளார். ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும், கல்லூரி நண்பர்கள் போல பழகினோம். பல பிரச்சினைகளை சந்தித்தாலும், எப்போதும் அழுவதில்லை. நான் கண்ணாடி முன் நின்று எனக்கே தைரியம் சொல்லிக் கொள்வேன். ஆனால் முதன்முறையாக, ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சி ரசிகர்களிடம் கைதட்டலுடன் வரவேற்பு பெற்றதை பார்க்கும்போது கண்கள் கலங்கின” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News