முதன்முதலில் சந்தித்த நிராகரிப்பு குறித்துப் பேசியிருக்கும் அனுபமா பரமேஸ்வரன், “பட வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த சமயத்தில் முதன்முதலான கதாபாத்திர தேர்விற்காகச் சென்றிருந்தேன். என்னிடம் புகைப்படம் மட்டுமே இருந்தது. நடிப்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ கூட என்னிடமில்லை. அங்குப் போன உடனே ஸ்கிரிப்டை கையில் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள்.இதுதான் ஸ்கிரிப்டா எனப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஆக்ஷன் என்று சொன்னவுடன் நடித்தேன். சரியில்லை மீண்டும் நடிக்கச் சொன்னார்கள். மறுபடியும் நடித்தேன். அவர்களுக்கு அதுவும் பிடிக்கவில்லை. மூன்றாவது முறையாகவும் நடித்தேன். ஆனால், ‘சரி நல்லா நடிச்சிங்க, பார்த்துக்கலாம், நாங்க கூப்பிடுகிறோம்’ என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகுக் கூப்பிடவேயில்லை என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
