அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள புதிய படம் ‘ஆர்யன்’, அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் தனுஷின் ராயன் படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில், ராயன் படத்தில் முதலில் சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தைப் பற்றி தனுஷ் என்னிடம் பேசினார்.
எனது கதாபாத்திரத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று நான் கூறினேன்; அவர் அதையும் ஏற்றுக் கொண்டு அந்த மாற்றங்களைச் செய்தார். ஆனால் உடனே ஷூட்டிங் செல்ல இருந்ததால் அந்த நேரத்தில் என் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. அதனால் ராயன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார்.

