சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு மற்றும் பஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள ‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த படத்தை ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தை முன்கூட்டியே பார்த்துள்ள நடிகர் கமல் ஹாசன், சமூக வலைதளத்தில் தனது பாராட்டுகளை பதிவிட்டுள்ளார்.

தன் பதிவில் அவர், ‛மாரீசன்’ படத்தை பார்த்தேன். இதில் நகைச்சுவையும், ஆழமான சிந்தனையையும் ஒன்றாக காண முடிகிறது. இது என்னைச் சிரிக்கவும், சிந்திக்கவும், அதன் கலைதிறனை ரசிக்கவும் செய்தது. இந்த அபூர்வமான படைப்பை உருவாக்கிய படக்குழுவினருடன் ஒரு அருமையான உரையாடலை நடத்தினேன்.
இந்த படத்தில் நகைச்சுவைக்கு அப்பாலும் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சமூகத்தின் மீது கவலையுடனும், அதன் இருண்ட பக்கங்களை திறந்தடிக்கும் கூர்மையான பார்வையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பார்வையாளராகவும், படைப்பாளியாகவும் இந்த படத்தால் நான் ஈர்க்கப்பட்டேன்” எனக் கூறி உணர்வுப்பூர்வமாக பாராட்டியுள்ளார்.