நானி தயாரித்து, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஹிட் 3’. இந்தப் படத்தில் ‘கே.ஜி.எப்’ மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது. ‘ஹிட் 3’ திரைப்படம் மூலம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். மே மாதம் 1-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். இந்த வாய்ப்பு குறித்து பேசும் போது, “நான் சிறு வயதிலிருந்தே ஷாருக்கானின் பல படங்களை பார்த்து வருகிறேன். அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது. அதேசமயம், இயக்குநர்கள் ராஜ்குமார் ஹிரானி சார் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி சார் ஆகியோரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதையும் பெரிதும் விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.