கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய தமிழ் உட்பட பல மொழிகளில் உருவான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. கே.ஜி.எப் படத்தை போல் இந்த திரைப்படமும் கன்னட சினிமாவை மேலும் உயர்த்தியது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் ப்ரிக்யூலான காந்தாரா: சாப்டர் 1’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மோகன்லால் நடிப்பதாக சில காலமாக செய்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் சமீபத்திய‘எம்புரான்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது, மோகன்லால் இந்த வதந்திகளுக்கு பதிலளித்தார். அவர் கூறும்போது, “‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கதாபாத்திரத்தைத் தாருங்கள்,” என்று தெரிவித்தார். தற்போது ‘காந்தாரா: சாப்டர் 1’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரிஷப் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.