ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் இந்தியாவுக்கு மீண்டும் வந்து இங்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். எனக்கு பாலிவுட் படங்கள் மிகவும் பிடித்தமானவை. அதில், நீங்கள் செய்யும் அனைத்துக்கும் தேவையான திறன் இயற்கையாகவே அமைந்துள்ளது. படத்தில் வரும் காட்சி திடீரென பாடலாக மாறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அதையே விரும்புகின்றேன். அதைப் போன்ற, பல்வேறு நாடுகளின் பாடல்களை ரசித்தே நான் வளர்ந்துள்ளேன்.” என அவர் பேசியுள்ளார்.இத்துடன், பாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் எடுக்க விரும்புவதாகக் கூறிய டாம் குரூஸ், இந்தியத் திரைப்படங்களில் வரும் ஆடல்களும் பாடல்களும் மிகவும் வேடிக்கையானது மற்றும் அற்புதமானது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
