ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற “பாட்ஷா” திரைப்படத்தில், ரஜினி, ரகுவரன், ஆனந்தராஜ் ஆகியோருக்கு அடுத்தபடியாக கேசவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தேவன். இந்த படம் அவருக்கு தென்னிந்திய அளவில் மிகுந்த புகழை தந்தது எனலாம். இந்நிலையில் சமீபத்தில் “ஜெயிலர் 2” படப்பிடிப்பில் ரஜினியை நேரில் சந்தித்துள்ளார் நடிகர் தேவன்.

சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, நான் கேரளாவுக்கு பயணம் செய்தபோது அட்டப்பாடி பகுதியில் ஜெயிலர் 2 படம் படமாகிக்கொண்டிருந்தது. அதில் ரஜினிகாந்த் இருப்பதாகத் தெரிந்து அவரை பார்க்கலாம் என முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் நேரில் சென்றேன். அப்போது ஒருவரிடம் என் பெயரை சொல்லி, ரஜினியை பார்க்க அனுமதி கேட்டேன். ஆனால் நான் அனுப்பிய நபர் வருவதற்கு முன்பே, மற்றொரு நபரிடம் சொல்லி என்னை அழைத்துவரச் செய்தார் ரஜினிகாந்த். அவர் தூரத்தில் இருந்தபோதே என்னை பார்த்துவிட்டிருந்தார்.
நான் அருகில் சென்றதும் அவர் என்னை கட்டிப்பிடித்து, எப்படி இருக்கிறீர்கள் என்று அன்புடன் விசாரித்தார். ‘பாட்ஷா’ படப்பிடிப்பின் போது அவர் என்மீது காட்டிய அன்பை, இப்போது மீண்டும் காண முடிந்தது. சுமார் அரை மணி நேரம் வரை அவருடன் உரையாடியபிறகு விடை பெற்றேன்” என்று தேவன் பகிர்ந்துள்ளார்.